மாஞ்சோலை தேயிலைத் தோட்டம்

KK Manjoli Jul17_087மாஞ்சோலை ஒரு நாள் பயணம்

மாஞ்சோலை ஒரு நாள் பயணத்தை இனிதே துவங்கினோம், மாலை 5 மணிக்கு முன் திரும்பி விட வேண்டும் என்று வனத்துறை அதிகாரியின் அனுமதி பெற்று சென்றோம். மலைப்பகுதியில் பயணம் பண்ணுவதே தனி அழகு. மனதிற்குள் சிறிய பயம், வனப்பகுதியில் வனவிலங்குகளால் ஏதாவது ஆபத்து
வருமா, குறுகிய சாலை, பள்ளதாக்கு இப்படி நிறைய இருந்தாலும் கடவுளை வேண்டி பயத்தை மறந்து ஆர்வத்துடன் பயணத்தை தொடர்ந்தோம்.
மிகவும் அழகான இயற்கை காட்சிகள். இயற்கை காட்சியை ரசிக்கிறோமோ இல்லையோ புகைப்படம் எடுத்துப்போம். முன்னாடி எல்லாம் நாம் பார்த்து ரசித்த காட்சிகளின் நினைவா புகைப்படம் எடுப்போம், ஆனா இப்போ வாட்ஸ் அப், பேஸ்புக்ல போட எடுக்கறோம். காலம் மாற எல்லாம் மாறுதுங்க.

மாஞ்சோலை மக்களைப் பற்றி ஒரு சில வரிகள். அங்குள்ள சின்ன சின்ன வீடுகள் தனி அழகு, வீட்டின் மேற்கூரை காற்றில் பறந்து செல்லாமல் இருக்க மணல் மூட்டைகளை போட்டு வைச்சு இருக்காங்க. குறைந்த அடிப்படை வசதிகள் உள்ள மலைப்பகுதி, தேயிலைப் பறிக்கும் பணியில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு இருக்காங்க, வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அழகா வழி சொல்றாங்க, சாப்பிட வாங்க உபசரிக்கறாங்க, மனசுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது அவங்க உபசரிப்பு. அங்குள்ள தேயிலைத் தோட்டத்தின் அழகு பார்க்க மிக அற்புதமாக உள்ளது.

காட்டு அணில், கருங்குரங்கு, காட்டுப்பன்றி, வனவிலங்குகளை பார்த்தோம். பலவிதமான பறவைகள், பூக்கள், மரங்கள், மயில்கள் கண்ணைக் கவரும் அழகு. மலைப்பகுதியின் உச்சிக்கு செல்லும்போது சில்லென்று காற்று நம்மை இதமாக வருடிச் செல்வது மிக அருமை.

KK Manjoli Jul17_015

ஓய்வின்றி சுழலும் இயந்திர வாழ்க்கையிலிருந்து இந்த ஒரு நாள் பயணம் மனதிற்கு இதமாக அமைந்தது. பிரிந்து வர மனமில்லாமல் மீண்டும் இயந்திர வாழ்க்கைக்கு பசுமையான நினைவுடன் திரும்பினோம்.

 

—-புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

One Comment Add yours

  1. sundarijothi says:

    அருமையான வர்ணனை .நானும் கூட பயணித்த உணர்வு .புகைப்படங்கள் அதற்கு இணை செய்வதாக இருக்கிறது .எளிமையானடநடையில் அழகிய பதிவு. வாழ்த்துக்கள்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s