அலையாத்திக் காடுகள் {Mangrove forest}

இந்தியாவில் உள்ள அலையாத்திக் காடுகள் 

  • கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக்காடே உலகின் மிகப் பெரிய அலையாத்திக் காடாகும்.
  • தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள காடு உலகிலேயே இரண்டாவது பெரிய அலையாத்திக் காடுகள் ஆகும்.
  • கோடிக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் மிகப் பெரிய அலையாத்தி காடுகளில் ஒன்றாகும்.

சுனாமிக்கு அஞ்சாத அலையாத்திக் காடுகள்

  • அலையாத்தித் தாவரங்கள் {அ} கண்டல் தாவரங்கள் {Mangrove}  எனப்படுபவை, கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும் தாவரங்களாகும்.
  • இவ்வகைத் தாவரங்கள் செறிந்து வளரும் இடங்களில், அவை உள்வரும் கடல் அலையைத் தடுத்து அனுப்புவதால், இத்தகைய மரங்கள், செடிகள் நிறைந்திருக்கும் இடம் அலையாத்திக் காடு {Mangrove forest}  எனப்படும்.
  • அலையாத்தித் தாவரங்களின் வேர்கள் நீருக்கு மேலாக அடர்ந்து தெரிவதுடன், கடற்கரை ஓரங்களில், கடலலையினால் ஏற்படக்கூடிய மண்ணரிப்பைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
  • 2004 டிசம்பர் 26 ம் தேதி ஏற்பட்ட சுனாமியால் முத்துப்பேட்டைக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்தது இந்த அலையாத்திக் காடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • குளிர் காலங்களில் வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகளின் சரணாலயமாகவும் இந்த அலையாத்திக் காடுகள் உள்ளன.
  • சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் இவ்வகையான அலையாத்தித் தாவரங்கள், தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

20170625_202239

—-புஷ்பா பிரகாஷ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s