முளைக்கட்டிய தானியங்களின் பயன்கள்

 • முளைத்தல் என்பது இயற்கையின் வரப்பிரசாதம்.
 • இயல்பாக பருப்பு வகைகளில் இருக்கக்கூடிய வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஈ போன்றவற்றின் அளவு முளைத்தலின் மூலமாக பருப்புகளில் பலமடங்காகிறது.
 • வைட்டமின் சி சில வகை பருப்புகளில் முளைத்தலின் போது பத்து மடங்கு வரை அதிகமாகிறது.
 • அதே போல் முளைத்தலின் போது வைட்டமின் பி1 {தையமின்}, வைட்டமின் பி2 {ரிபோஃளேவின்}, வைட்டமின் பி3 {நிக்கோடினிக் ஆசிட்} போன்ற வைட்டமின்கள் இரு மடங்கிற்கு மேல் அதிகமாகிறது.
 • பருப்பு வகைகளில் உள்ள இரும்பு சத்து முளைத்தலின் போது ஏற்படும் வேதியியல், உயிரியில் மாற்றங்களால் நம் உடலில் எளிதில் உறிஞ்சக்கூடிய வகை இரும்புச் சத்தாக மாறுகிறது.
 • சில வகை பருப்பு வகைகளில் உதாரணமாக சோயா பீன்ஸ், பச்சையாக {அ} ஊற வைத்து உண்டால் அதில் உள்ள ஒரு வகை புரோட்டீன் நம் உடலில் அஜீரணம், பேதி போன்றவற்றை உண்டாக்கும்.
 • இதனால் இவ்வகை பருப்புகளை வேக வைத்து உண்கிறோம். வேக வைக்கும் போது அதில் உள்ள நச்சு பொருட்களுடன் சேர்ந்து வைட்டமின்களும் அழிந்து விடுகின்றன.
 • இதனை தவிர்க்க முளைக்க வைத்தலே சிறந்த வழியாகும்.
 • இத்துடன் முளைக்க வைத்தலின் போது பருப்பு வகைகள் எளிதில் செரிமானம் ஆகக் கூடியவையாக மாற்றப்படுகின்றது.
 • சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிட்டால் மிகவும் நல்லது.
 • பல பருப்பு வகைகளை முளைக்க வைத்து பின் நிழலில் உலர்த்தி பின்பு கஞ்சி மாவாக அரைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் நல்லது.

 

முளைக்க வைக்க கூடிய பருப்பு வகைகள்:

மூக்கடலை, பச்சைப் பயிறு, கேழ்வரகு, கோதுமை, வெந்தயம், திணை, கொள்ளு, உளுந்து, எள், சோயா, பட்டாணி, போன்ற பொருட்களை முளைக்க வைத்து பயன்படுத்துவது மிக நல்லது.

 

—-புஷ்பா பிரகாஷ்

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s