வயிறு சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க சில குறிப்புகள்

 • சமையலறையைச் சுத்தமாக ஈ, கொசு, தண்ணீர் கொசு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 • திறந்த வெளிக்கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்கிச் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
 • வீட்டில் சுட்ட எண்ணெயில் திரும்பத் திரும்ப சமைப்பது கூடாது.
 • நேற்று சமைத்த உணவு வகைகளை உண்ண வேண்டாம். சரியான அளவு சமைத்து அன்றே சாப்பிட்டு விடுங்கள். திரும்பத் திரும்ப சூடுபடுத்தினால் சத்தும் இருக்காது.
 • முடிந்த வரை செம்பு, மண் பாண்டங்களை உபயோகிக்கவும். செம்பு உடம்பிற்குச் சத்து, மண் பாண்டம் குளுமை, உணவும் சீக்கிரம் கெடாது.
 • அலுமினியம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இரும்பு சட்டியை பயன்படுத்தினால் இரும்பு சத்து கிடைக்கும்.
 • நம் முன்னோர்கள் நம் சீதோஷ்ணத்திற்கு ஏற்ற எள் எண்ணெய் {நல்லெண்ணெய்} உபயோகித்தார்கள். நல்லெண்ணெயை சமையலில் பல வகைகளில் உபயோகிக்கலாம். உடல் நலத்திற்கு சிறந்தது.
 • கடலைப் பருப்பு அதிக வாய்வு. பொதுவாக பருப்பு வகைகளை சமையலில் பயன்படுத்தும் போது அதில் பெருங்காயம், பூண்டு சேர்த்தால் பருப்பில் உள்ள வாய்வு அகலும்.
 • முடிந்த வரை பருப்பு வகைகளை வேக வைத்து பயன்படுத்தவும். வேக வைக்காமல் அடை போன்றவற்றை தவிர்க்கவும்.
 • இனிப்பு வகைகளில் ஏலக்காய் சேர்க்க செரிமானத் தன்மை அதிகரிக்கும்.
 • பச்சை கொத்தமல்லி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான நோய்கள் குறையும்.
 • இஞ்சி செரிமான சக்தியை அதிகரிக்கும். மழை, பனிக்காலம் என்றால் இஞ்சி சேர்க்க வயிறு, சளி, ஜுரம் எல்லாவற்றிற்கும் நல்லது. ஆனால் மூலம், அல்சர் உள்ளவர்கள் இஞ்சியை உணவில் சேர்க்க கூடாது.
 • வற்றல், அப்பளம், வடை, பூரி, பரோட்டா போன்ற உணவு வகைகளை அடிக்கடி சாப்பிடாமல் அளவோடு சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் குறையும்.
 • அல்சர், வயிற்றில் புண் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து வாரத்திற்கு மூன்று நாள் சாப்பிட வயிற்று புண் ஆறும். மணத்தக்காளி கீரை தண்ணீர் சாறு {சூப்} வைத்தும் குடிக்கலாம்.
 • மாதுளை பழச்சாறு இரத்த விருத்தி, அதிக உஷ்ணம், குடல் பலஹீணம் போன்றவற்றிற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது.
 • வாழைப்பழம் சாப்பிட வயிற்று புண் ஆறும்.
 • மிக எளிமையானது மோர். மோரில் பெருங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி வேண்டுமெனில் ஒரு மூடி எலுமிச்சை சாறு விட்டு அருந்த வயிற்று கோளாறு, வாயு தொல்லை, அல்சர் போன்றவற்றிற்கு மிகச் சிறந்தது.
 • அடிக்கடி தேனீர் {டீ} குடிப்பவர்கள், தேநீர் நேரத்தை{Tea Time}  மோர் நேரமாக {Buttermilk Time} மாற்றி பருகுங்கள். வயிற்று சம்பந்தமான நோய்களில் இருந்து விடுபடலாம்.
 • சாப்பிடும் நேரம் மிக அமைதியாகவும், பரபரப்பின்றியும் உணவு உண்ண வேண்டும்.
 • மனதில் பல கவலையுடன் உணவில் மனமில்லாமல் உண்ணும் போது அல்சர், வாய்வு போன்ற பல நோய்கள் வரும். மன அமைதியே உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
 • இந்த வயிற்றுக்கு தான் நாம் எல்லோரும் இவ்வளவு பாடுபடுகிறோம். அப்படிப்பட்ட இந்த வயிற்றை கவனிக்காமல் விட்டு பின் பல கோளாறுகளுடன் போராடுவதை தவிர்க்கலாமே.

 

—-புஷ்பா பிரகாஷ்

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s