காய்கறிகளை பார்த்து வாங்க சில டிப்ஸ்

முள்ளங்கி:

பார்த்தாலே இது இளசு எனச் சொல்லி விடலாம்.

மெல்லிசாக வாங்குவது நல்லது. கிள்ளினால்

தெரிந்து விடும்.

கோவைக்காய்:

சின்ன சின்னதாக மெல்லிசாக இருக்க வேண்டும்.

பாகற்காய்:

கரும்பச்சை உதவாது. இளம் பச்சையோடு மேலே

நிறைய முள்ளோடு மெல்லிசாக இருந்தால் இளசு.

சௌசௌ:

இதில் முள் இருக்கக் கூடாது. “இளசு” எனக்

கையில் எடுத்தாலே தெரியும்.

கோஸ்:

தூக்கிக் கையில் பந்து போல உருட்டுங்கள்

கனமாக இருந்தால் நல்ல கெட்டி கோஸ், உள்ளே

புழு இருக்காது.

கத்திரிக்காய்:

காம்பில் முள் இருக்கும். அமுக்கினால்

மெத்தென்று இருந்தால் இளசு.

நூல்கோல்/ நூக்கல்:

பச்சை நிறமாக இருந்தால் தான் வாங்க

வேண்டும். வெள்ளையாக இருந்தால் உள்ளே நீர்

வற்றி முத்திப் போய் இருக்கும்.

வெண்டைக்காய்:

எல்லோருக்கும் தெரியும் காம்பு ஒடிந்தால் இளசு.

வெள்ளை வெண்டைக்காய் சுவையாக இருக்காது.

சுரைக்காய்:

நகம் வைத்து அழுத்தினால் இறங்க வேண்டும்.

அப்போது தான் முத்தல் இல்லை என அர்த்தம்.

வாழைத்தண்டு:

அடித்தண்டு, மேல்தண்டு இல்லாமல் நடுவிலுள்ள

தண்டே நன்றாக இருக்கும்.

பீர்க்கங்காய்:

முள் இருக்க வேண்டும். உடைத்துத் தின்று பார்க்க

வேண்டும், கசப்பு தட்டினால் வேண்டாம்.

வெள்ளரிக்காய்:

இதையும் சாப்பிட்டு பார்த்து வாங்குவது நல்லது.

கசப்பு சுவை சிலதில் இருக்கும்.

பச்சை பட்டாணி:

ஊட்டிப் பட்டாணி இனிப்பாக இருக்கும். தோலோடு

வாங்குவது நல்லது. சின்னதாக இருந்தால்

பெங்களூர் பட்டாணி. டில்லி பட்டாணி சுமாராக

இருக்கும்.

தக்காளி:

திண்டுக்கல் தக்காளி தான் சுவையாக இருக்கும்.

இது புளிப்புடன் கொளகொளவென இருக்கும்.

ஆனால் பெங்களூர் தக்காளி பார்க்க

கவர்ச்சியாகவும், கெட்டியாகவும் இருப்பதால்

அதையே எல்லோரும் விரும்புகிறார்கள்.

தக்காளியின் உண்மை சுவை சிறிய திண்டுக்கல்

தக்காளியில் தான் உள்ளது.

 

 

—-புஷ்பா பிரகாஷ்

 

 

 

Advertisements

2 Comments Add yours

  1. sundarijothi says:

    Nice tips to buy vegetables .

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s