டிப்ஸ் / சமையல் குறிப்புகள்

 • வித்தியாசமான பிரெட் டோஸ்ட் முயற்சி பண்ணி பாருங்க, சிறிது பால் பவுடரை வெந்நீரில் கலந்து பிரெட் மேல் தடவி வழக்கம் போல டோஸ்ட் செய்யுங்கள். சுவையா இருக்கும்.
 • பாசுமதி அரிசியை சன்ன ரவை போல உடைத்து வைத்துக் கொண்டால், அவசரத்திற்கு கட்லெட்டை அதில் புரட்டி எடுத்துச் செய்யலாம்.
 • ஒரு மாறுதலுக்கு மாங்காயை அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, காரம் பிசிறி கிள்ளு பக்கோடா போல பொரித்தெடுங்கள். மிகவும் ருசியாக இருக்கும்.

தூள் பக்கோடா செய்ய வெங்காயம் குறைவாக இருந்தால் கோஸ் பொடியாக நறுக்கி கலந்து பக்கோடா செய்ய `தூள் பக்கோடா` `தூள்` எனப் பாராட்டு கிடைக்கும்.

 • தேங்காய் சட்னி அரைக்கும் போது சிறிது மாங்காய் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
 • ரவை {அ} சேமியா கிச்சடி எதுவாக இருந்தாலும் சரி கிளறி இறக்கும் முன் மிகப் பொடியதாக அரிந்த தக்காளித் துண்டுகளைச் சேர்த்து நன்கு கிளறி ஒரு நிமிடம் மூடி பின் பரிமாற கிச்சடியின் நிறம் மாறாமலும் தக்காளியும் சற்றே மெத்தென்று இருக்கும்.
 • வீட்டில் எடுத்த வெண்ணெயாக இருந்தாலும் சரி, கடையில் வாங்கிய வெண்ணெயாக இருந்தாலும் சரி, அதை அப்படியே காய்ச்சக் கூடாது. அதை பாத்திரத்தில் போட்டு மோர் போகும் வரை தண்ணீர் விட்டு நன்றாக கலக்கி வடித்து எடுத்த பின் வாணலில் போட்டுக் காய்ச்சினால் கசடு வராது. நெய் மணமாக இருக்கும்.
 • சேப்பங்கிழங்கை வேக வைத்துத் தோலை உரித்து விட்டு இரண்டு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சமைத்தால் கொழ, கொழப்பு நீங்கி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும், பிறகு சமையலில் பயன்படுத்தலாம்.
 • குலாப்ஜாமூன் செய்யும் போது சர்க்கரைப்பாகு மீந்து விட்டால், பிரெட்டை துண்டுகளாக்கி வாணலில் சிறிது நெய் ஊற்றி சூடு செய்து பிரெட் துண்டுகளை போட்டு பிரட்டி எடுத்து பாகில் போட்டுக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

 

—-புஷ்பா பிரகாஷ்

 

Advertisements

2 Comments Add yours

 1. sundarijothi says:

  Very useful tips.keep it up.

  Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s