டிப்ஸ் / சமையல் குறிப்புகள்

  • பனீரை சமையலில் பயன்படுத்தும் முன் சிறு சிறு துண்டுகளாக அரிந்து மிதமான சூடு தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டி விட்டு பனீரை பயன்படுத்தினால் மிருதுவாக இருக்கும்.
  • வெங்காயம், தக்காளி சீக்கிரம் வதங்க சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  • முட்டைகோஸை வேக வைக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்து வேக வைத்தால் வாசனையாக இருக்கும்.
  • கீரை, புதினா, கொத்தமல்லி போன்றவற்றை கவருடன் அப்படியே ஃப்ரிட்ஜில் வைக்காமல், நன்கு ஆய்ந்து பின் டப்பாவில் போட்டு வைக்க நன்றாக இருக்கும்.
  • காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக அரிந்து தண்ணீரில் போட்டு அதனுடன் சிறிது மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊற விடவும். பின் தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை பயன்படுத்தினால் அதிலுள்ள பூச்சிகள்  நீங்கி சுத்தமாக இருக்கும்.
  • ஃப்ரிட்ஜில் கேரட்டின் அடி முனையை நீக்கி விட்டு வைத்தால் அழுகாமல் இருக்கும்.
  • குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்கும் போது சிறிது மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சீரகம், வெந்தயம் சேர்த்து வேக வைக்கவும். இப்பருப்பை பயன்படுத்தி சாம்பார் வைக்கும் போது சுவையும், மணமும் கூடும். வாயுத்தொல்லை இருந்தும் விடுபடலாம்.
  • பச்சை மிளகாய் காம்பை நீக்கி ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க நன்றாக இருக்கும்.
  • ஃப்ரிட்ஜில் காய்கறிகளை ப்ளாஸ்டிக் கவரில் போடுவதை தவிர்க்கவும். துணி கைப்பைகளில் போட்டு வைத்தால் வாடி வதங்காமல், அழுகாமலும் இருக்கும்.
  • பொடியாக அரிந்த வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய், கத்திரிக்காய் கறுப்பாகாமல் தவிர்க்க அரிசி கழுவிய நீர் {அ} தண்ணீரில் சிறிது மோர் கலந்து அதில் போடவும்.

–புஷ்பா பிரகாஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s