நவதேவதைகள்

  • அருகர்: அறவுரை {சமவ சரண} மண்டபத்தில் எழுந்தருளி தம் “திவ்ய தொனி” யின் மூலம் உயிரினங்களை துன்பத்தினின்றும் விடுபடும் வழியை அருளிச் செய்யும் அறவாழி அண்ணல்.

 

  • சித்தர்: வினைகள் எல்லாவற்றையும் {எட்டினையும்} நீக்கி, மீண்டும் பிறவா நிலையை அடைந்த ஆன்மன்.

 

  • ஆசாரியர்: வீடுபேறு அடைவதற்குக் காரணமான ஐவகை ஆசாரங்களையும் தாம் குற்றமில்லாமல் மேற்கொண்டு ஒழுகுவதுடன், தம் சீடர்களையும் அவ்வாறே ஒழுகச் செய்பவர். மேலும் மும்மணிகளையும் முழுமணிகளாக மேற்கொண்டு ஒழுகுபவர்.

 

  • உபாத்தியாயர்: ஜினேஸ்வரரால் அருளிச் செய்யப்பட்ட அறங்களை ஐயமறக் கற்றுணர்ந்து தாம் கற்றவற்றைத் தம் சீடர்களுக்கு {மாணாக்கர்களுக்கு} எடுத்து விளக்கும் ஆற்றல் பெற்றவர்.

 

  • சர்வ சாதுக்கள்: பலவகையான தவங்களைக் கடைப்பிடித்து, ஆன்ம வளர்ச்சிக்கு தளர்விலாது முயற்சி செய்பவர்.

 

  • ஜினதருமம்: நான்கு கதிகளில் ஏற்படும் துன்பங்களை அகற்றி மோட்ச இன்பத்தைத் தரக்கூடிய அருகனறம்.

 

  • ஜினஸ்ருதம்: ஜினேஸ்வரரால் அருளிச் செய்யப்பட்ட அற நூல்கள்.

 

  • ஜின சைத்யம்: ஜினேஸ்வரருடைய திருஉருவ படிமம் {ஜின பிம்பம்}

 

  • ஜின சைத்யாலயம்: ஜினஸ்வரருடைய திருஉரு {ஜினபிம்பம்} எழுந்தருளியுள்ள ஆலயம் {ஜிநாலயம்}.

 

இந்த சிறப்பான ஒன்பதும் நவதேவதைகள் எனப்படும்.

 

Reference: தீர்த்தங்கரரின் திவ்வியத் தொனி, ஆசிரியர்: திருமதி. பத்மஜோதி விஜயகுமார்

–புஷ்பா பிரகாஷ்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s