தீப ஆரதி – பாடல்

தீப ஆரதி ! ஜெய தீப ஆரதி !

தீப மங்கள தீப மங்கள தீப ஆரதி !

{தீப}

ஆதி ஜின பகவருக்கு தீப ஆரதி

அஜித ஜின தேவருக்கு தீப ஆரதி

ஐம்பத மருள் சம்பவருக்கு தீப ஆரதி

அபிநந்தன நாதருக்கும் தீப ஆரதி

{தீப}

அமலகுண சுமதியற்கு தீப ஆரதி

அருளும் பத்மபிரப தமக்கு தீப ஆரதி

சுகமருள் சுபார்ஸ்வருக்கு  தீப ஆரதி

சோதி சந்திரப்ரபர் தமக்கு  தீப ஆரதி

{தீப}

புஷ்பதந்த புங்கவருக்கு தீப ஆரதி

புகழ் சீதள நாதருக்கு தீப ஆரதி

சிரேயாம்ச தேவருக்கு தீப ஆரதி

ஸ்ரீ வாசுபூஜ்ய தேவருக்கு தீப ஆரதி

{தீப}

விமலநாத அமலருக்கு தீப ஆரதி

வீடுசேர் அனந்தருக்கு தீப ஆரதி

தர்மநாத தலைவருக்கு தீப ஆரதி

தக்க சாந்தி தேவருக்கு தீப ஆரதி

{தீப}

குந்துவென்னும் கோமானுக்கும் தீப ஆரதி

குலவும் அர தீர்த்தங்கரர்க்கு தீப ஆரதி

நல்லறம் சொல் மல்லியர்க்கு தீப ஆரதி

நம் முனிசூவ்ரதர் தமக்கு தீப ஆரதி

{தீப}

அமித இசை நமியருக்கு தீப ஆரதி

அரிஷ்ட நேமிநாதருக்கு தீப ஆரதி

பச்சை வண்ண பார்ஸ்வருக்கு தீப ஆரதி

பகரும் மகாவீரருக்கும் தீப ஆரதி

{தீப}

 

–புஷ்பா பிரகாஷ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s