பஞ்ச மந்திரம் / Pancha Mantra

Karnataka Nov 2010_0200

ஓம் ணமோ அரஹந்தாணம்
ஓம் ணமோ ஸித்தாணம்
ஓம் ணமோ ஆயிரியாணம்
ஓம் ணமோ உவஜ்ஜாயாணம்
ஓம் ணமோ லோயே ஸவ்வ ஸாஹுணம்

அருகரை வணங்குகிறேன், சித்தரை வணங்குகிறேன், ஆசாரியரை வணங்குகிறேன்,  உபாத்தியாயரை வணங்குகிறேன், சாதுக்கள் எல்லோரையும் வணங்குகிறேன்

ஏஸோ பஞ்ச ணமோக்காரோ
ஸவ்வ பாவப் பணாஸணோ
மங்கலாணம் ச ஸவ்வேஸிம்
படமம் ஹவயி மங்கலம்

இந்த ஐவர் வணக்கம் எல்லாத் தீமைகளையும் ஒழிப்பது. இம்மங்கலம், எல்லா மங்கலங்களிலும் முதன்மையானது

ஓம் சத்தாரி மங்கலம்
அரஹந்தா மங்கலம்
சித்தா மங்கலம்
சாஹு மங்கலம்
கேவலி பண்ணத்தோ தம்மோ மங்கலம்

சிறப்புடைய மங்கலங்கள் நான்கு; அவை அருகப்பட்டாரகர் மங்களமானவர்; சித்த பரமேஷ்டிகளூம் மங்களமானவர்; ஆசாரிய, உபாத்தியாய, சர்வ சாதுக்களூம் மங்களமானவர்கள்; கேவலி ஞானிகளால் திருமொழியின் மூலம் அருளிச் செய்யப்பட்ட திருவறமும் மங்களகரமானது

சத்தாரி லோகுத்தமா
அரஹந்தா லோகுத்தமா
சித்தா லோகுத்தமா
சாஹு லோகுத்தமா
கேவலி பண்ணத்தோ தம்மோ லோகுத்தமா

உலகில் உத்தமமானவை நான்கு; அவை அருகபட்டாரகர் உலக உத்தமர், சித்த பரமேஷ்டிகளூம் உலக உத்தமர், ஆசாரிய, உபாத்தியாய, சர்வ சாதுக்களூம் உலக உத்தமர்கள்; கேவல ஞானியால் அருளிச் செய்யப்பட்ட திருவறமும் உலகத்தில் உத்தமமானது

சத்தாரி சரணம் பவ்வஜ்ஜாமி
அரஹந்தா சரணம் பவ்வஜ்ஜாமி
சித்தா சரணம் பவ்வஜ்ஜாமி
சாஹு சரணம் பவ்வஜ்ஜாமி
கேவலி பண்ணத்தோ தம்மோ சரணம் பவ்வஜ்ஜாமி

ஆகவே யான் இந்த நான்கு வகையினரையும் சரண் அடைகிறேன். அரகந்த பட்டாரகரைச் சரண் அடைகிறேன்; சித்த பரமேஷ்டிகளையும்  சரண் அடைகிறேன்; ஆசார்ய, உபாத்தியாய, சர்வ சாதுக்களையும் சரண் அடைகிறேன், கேவலி ஞானிகளால் அருளிச் செய்யப்பட்ட திருவறத்தையும் சரண் அடைகிறேன்

Reference: அருகப்பெருமான் திருமொழி, ஆசிரியர்: திருமதி. பத்மஜோதி விஜயகுமார்

–Pushpa Prakash

2 Comments Add yours

  1. kayshree says:

    am really stunned to read such lovely mantras…hats off to you . thanks .

    Liked by 1 person

  2. pushsaran says:

    Thanks for your encouraging words.

    Like

Leave a comment